பூவுலகில் வாசத்தை தந்து வாடி விட்டது
சஞ்சீவி மலர்
இனி சொர்க்கத்திலும் மனிதம் பூக்கும்
ஆங்காங்கே கற்பக தருக்களில்
அக்கினிக் குஞ்சுகள் கூடு கட்டும்..........!!!
ஏய்........எம தர்மனே.....!!!
பூவுலகில் வானுலகு பொறாமை கொள்வதற்கு
இது தான் நேரமா.........
சொர்க்கத்தில் அறிவுப்பசிக்கு
இது தான் காலமா........!!!
சற்றே அவசரம் கொண்டு விட்டாய் நீ
இதுவல்ல தர்மம்...........!!!
இளைஞர் மனங்களின் மரணத்தை மரணிக்க செய்த
புன்னகைப் பூ
கனவு தேசங்களால்
வெற்றி பறிக்கச் சொல்லிக் கொடுத்த
புன்னகை தேவன்
சொர்க்கத்தின் வண்ண இரதத்தில் பயணித்தான்(ர்)
எமக்கு புரிகிறது.....!!!
இனி வானுலகில் புதுமைகள் விரியும்
பூவுலகில் இளையவர் மனங்களில்
விதைக்கப்பட்ட கனவு விதைகள்
ஒரு நாள் கலாம் பெயர் சொல்லி
பூச்சொரியும்.......!!!
0 comments:
Post a Comment